மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அயோத்தி கோவிலுக்கு பாம் வைத்து தகர்ப்போம் - 2 பேர் கைது; விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் ரூ.1800 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாவிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பாரதிய கிசான் மஞ்ச் தேசியத் தலைவர் தேவேந்திர திவாரிக்கு, மின்னஞ்சலில் ராமர் கோவிலை தகர்ப்போம். ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளிடம் சொல்லி ராமர் கோவிலை தகர்த்து, உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முக்கிய புள்ளிகளை கொல்வோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தேவேந்திர திவாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் மின்னஞ்சலை வைத்து ஓம்பிரகாஷ் மிஸ்ரா, தஹர் சிங் ஆயோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் மாற்று மதத்தை சேர்ந்தவர்களின் பெயரில் போலியான மின்னஞ்சலை உருவாக்கி எச்சரிக்கை செய்தி அனுப்பியது தெரியவந்தது.