மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்த 5 நாளில், பால் குடித்துக் கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்.! பறிதாபமாக இறந்து போன பிஞ்சு.!
கேரளாவில் 5 நாட்களே ஆன ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது மூச்சு திணறல் ஏற்ப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சித்தார் தாலுகா மருத்துவமனையில் கடந்த நவம்பர் 14-ம் தேதி வித்யா மற்றும் மனு தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளது.
அதன்பின் குழந்தை கடந்த நவம்பர் 17-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை பிறந்து 5 நாட்கள் ஆன நிலையில் அதற்கு வித்யா தாய்ப்பால் கொடுத்துக் கொண்டு இருந்துள்ளார்.
குழந்தை வேக வேக வேகமாக பால் குடித்துக் கொண்டிருந்தபோது மூச்சு திணறி உயிரிழந்து இருக்கிறது. தூக்கத்திலேயே குழந்தை பால் குடித்துக் கொண்டு இருந்துள்ளது. மறுநாள் காலை குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்ட பெற்றோர் உடனடியாக பதறியடித்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.