#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. ஓடும் காரில் இருந்து சாலையில் தவறி விழுந்த குழந்தை.. வெளியான சிசிடிவி காட்சி
குழந்தை ஒன்று ஓடும் காரில் இருந்து நடுரோட்டில் தவறி விழுந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ எங்கு, எப்போது நடந்தது என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. ஷிரின்கான் என்ற டிவிட்டர் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பதிவில், போக்குவரத்துக்கு மிகுந்த சாலை ஒன்றில் கார் ஒன்று சென்றுகொண்டிருக்கும்நிலையில், அந்த காரின் பின்பக்க கதவு வழியாக சிறு குழந்தை ஒன்று தவறி சாலையில் விழுகிறது.
குழந்தை சாலையில் விழுவதை பார்த்த சக வாகன ஓட்டிகள் உடனே தங்கள் வாகனங்களை நிறுவிட, அந்த குழந்தையோ தனது தாய் ஓட்டிச்செல்லும் கார் பின்னாலையே ஓடுகிறது. பின்னர் அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அந்த குழந்தையை பிடித்துக்கொள்ள, அந்த குழந்தையின் தாய் காரை நிறுத்திவிட்டு தனது குழந்தையை நோக்கி ஓடிவருகிறார்.
இந்த காட்சி அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த நிலையில் தற்போது இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.