திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பகீர்.. அரசு பள்ளியில் நடந்த கொடூரம்.. கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.!
கர்நாடக மாநிலம் களப்புரகி மாவட்டம் சின்னமகேரா கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அங்கே மதிய உணவு ஏற்பாடு செய்து தினமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் பணிகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. இதனையடுத்து பணியாளர்கள் தயாரான சாம்பார் பாத்திரத்தை மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து வைத்துள்ளனர்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி மகந்தம்மா சிவப்பா தடுமாறி எதிர்பாராத விதமாக கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் அலறி துடித்த பள்ளி மாணவியை ஆசிரியர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதனையடுத்து மாணவிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி முதன்மை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஆகியோரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.