திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
22 வாரங்கள் ஆன சிசு குப்பைத்தொட்டியில் கண்டெடுப்பு.. 7 பேர் கைது., மருத்துவர் தலைமறைவு.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஹாஸ்கோட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் 22 வாரங்களே ஆன பெண்சிசு குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிசுவின் சடலத்தை கண்ட மருத்துவ பணியாளர்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதல் கட்ட விசாரணைக்கு பின்னர், இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் குழந்தைகளின் பாலினத்தை கண்டுபிடித்து, குழந்தை கருக்கலைப்பு செய்த சம்பவங்களும் நடைபெற்றதாக தெரிய வருகிறது.
அதேபோல திருமணத்தை மீறிய உறவு மற்றும் திருமணத்திற்கு முன்பே தனிமையில் சேர்ந்து கர்ப்பமாகும் ஜோடிகளுக்கு கருக்கலைப்பு செய்யும் சம்பவங்களும் நடந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.