96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஓரினசேர்க்கை ஜல்சா.. உல்லாசத்திற்கு சென்றவர் கைலாசம் போனார்.. உல்லாசத்திலேயே பிரிந்த உயிர்.. பெரும் சோகம்.!
நண்பருடன் ஓரினசேர்க்கை வயப்பட்டவர் உல்லாசத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரணமாக திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார். அவரின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். தமிழகத்தை சார்ந்தவர் பெங்களூரில் உயிரை விட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், மாரத்தஹள்ளி தங்கும் விடுதியில் ஜூன் மாதம் 6-ம் தேதி தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி ராஜகோபால் மர்மமான முறையில் உயிரிழந்து இருந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாரத்தஹள்ளி காவல் துறையினர், சென்னையை சேர்ந்த தமிழ்வண்ணன் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.
இவரிடம் விசாரணை நடத்துகையில் பல பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது, சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமிழ்வண்ணன் பணியாற்றுகிறார். இவருக்கும், ராஜகோபாலுக்கும் 2020-ல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களின் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் ஓரினசேர்கைக்கு உடன்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மே மாதத்தின் பொது பெங்களூர் வந்த தமிழ்வண்ணன் தேவரபீஸானஹள்ளி நகரில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார். ராஜகோபாலையும் பெங்களூருக்கு வருமாறு தமிழ்வண்ணன் அழைக்கவே, அவரும் ஜூன் மாதத்தில் பெங்களூர் வந்துள்ளார். இருவரும் விடுதியில் அறையெடுத்து ஓரினசேர்கையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அந்த தருணத்தில், இருவருக்கும் இடையே தீடீரென பிரச்சனை ஏற்படவே, பேசிக்கொண்டு இருக்கும்போதே ராஜகோபால் மாரடைப்பால் மயங்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையை பொறுத்து மேற்படி நடவடிக்கை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவரும் ஓரினசேர்க்கை உல்லாசத்தின் போது உல்லாச மாத்திரை ஏதேனும் எடுத்துக்கொண்டார்களா? அதன் ஒவ்வாமையால் ராஜகோபால் உயிரிழந்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.