மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் இவ்வளவு பணமா! எவ்வளவு இருந்தது தெரியுமா?-அதிர்ச்சியில் போலீஸ்!
ஆந்திர மாநிலம் மதனபள்ளியைச் சேர்ந்தவர் பஷீர் சாப். 75 வயதாகும் இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல்லில் இருக்கும் தர்காவிற்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.தனது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பிச்சை எடுத்து வந்த அவர் இன்று உயிரிழந்தார்.
இந்த தகவல் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த போலீஸ் அவரின் சடலத்தை மீட்டு அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் அவரது பையை சோதனை செய்த போது, அதில், 3 லட்சத்து 22 ஆயிரத்து 670 ரூபாய் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஒரு பிச்சைக்காரருக்கு எது இவ்வளவு பணம்?, சேர்த்து வைத்திருந்தாரா என்பது குறித்து எல்லாம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.