#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாயின் உல்லாச உறவை நேரில் பார்த்துவிட்ட சிறுமி.. வெந்நீரை ஊற்றிய கொடூரம்.!
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே கலபுரகி டவுன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வார்டன் வேலை பார்த்து வருபவர் ஒரு 9 வயது பெண் குழந்தையின் தாய்.
அந்தப் பெண் கணவனை இழந்த நிலையில் தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்தப் பெண்ணிற்கு இறுதியில் இருக்கும் அரசு ஊழியர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பானது ஒரு கட்டத்திற்கு பின்னர் முறை தவறிய உறவுக்கு வழிவகை செய்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஜோடிகள் தங்கள் கள்ள காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் அந்த வார்டனின் குழந்தை தாய் மற்றும் அரசு ஊழியர் இருவரும் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து விட்டார். இதை கவனித்த அந்த கள்ளக்காதல் ஜோடி சிறுமியை அடித்து துன்புறுத்தி இந்த விஷயம் குறிப்பு யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
அது மட்டும் அல்லாமல் கொதிக்க கொதிக்க சிறுமி மீது வெந்நீரை ஊற்றிய அந்த கொடூரத்தாய் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். உடலில் ஏற்பட்ட காயங்களுடன் அந்த 9 வயது சிறுமி அழுது கொண்டே அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று தனது தாய் மீது புகார் கொடுத்துள்ளார்.
சிறுமியின் புகாரின் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதலுக்காக பெற்ற மகளின் முகத்திலேயே சூடு தண்ணீரை ஊற்றிய தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.