மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வைத்த ட்விஸ்ட்., அடையாளப்படுத்தப்பட்ட “பாரத்”! கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!!
எதிர்க்கட்சிகள் அவரது அணிக்கு 'INDIA' என்று பெயர் சூட்டியதை தொடர்ந்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக பிஜேபி இந்தியா என்ற பெயரையே ஒதுக்கி வருகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கேற்ப, இன்று டெல்லியில் கோலாகலமாக தொடங்கப்பட்ட ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயரிட்ட பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள பல நாடுகளில் இருந்து வந்துள்ள தலைவர்களுக்கு குடியரசு தலைவர் விருந்தளிக்க உள்ளார். இதற்காக அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது அதில், இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத குடியரசு தலைவர் என்று இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.