திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவிகள் மீது திடீர் தடியடி நடத்திய காவல்துறை: பீகாரில் அதிர்ச்சி சம்பவம்.!
பீகார் மாநிலத்தில் உள்ள ஆராஹ் மாவட்டத்தில் வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இன்று இப்பல்கலை.,யில் பயின்று வரும் மாணவ - மாணவிகள் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பீகார் மாநில ஆளுநர் பல்கலை.,யில் நடைபெறும் கூட்டத்திற்கு வருகை தரவிருந்த நிலையில், ஏபிவிப கட்சியின் ஆதரவாளர்கள் தங்களின் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல் துறையினர் திடீர் தடியடி நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்து மாணவர்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் அப்பகுதியில் லேசான பதற்ற சூழல் உருவாகி இருக்கிறது. சில மாணவர்கள் அங்குள்ள வாரியில் விழுந்து எழுந்து செல்லும் காணொளி காட்சிகளும் வெளியாகியுள்ளன. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
#WATCH | Bihar: Police resort to lathi-charge to disperse the students protesting over several demands during the senate meeting of Veer Kunwar Singh University in Arrah. pic.twitter.com/mGGGfwgOfh
— ANI (@ANI) December 23, 2023