#Breaking: உடைந்தது INDIA கூட்டணி: பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பீகார் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா கடிதத்துடன் அம்மாநில ஆளுநரை சந்திக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.
2020ம் ஆண்டு ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், கூட்டணி அரசும் அமைக்கப்பட்டது. இதனிடையே, திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டு அங்கு ஐக்கிய ஜனதாதளம், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து ஆட்சி நடைபெற்று வந்தது.
2025ல் மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் தனது கைகளைக்கோர்த்து ஆட்சியை அமைக்கவுள்ளார். இன்று (ஜன.28) அம்மாநிலத்தில் தலைமை செயலகம் உட்பட அரசு அலுவலகங்கள் செயல்பட முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் இராசேந்திர அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து தற்போதைய கூட்டணி ஆட்சியில் பெற்ற முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்யும் நிதிஷ் குமார், மாலையே பாஜக ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றுகிறார்.
பீகார் மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வரும் நிதிஷ் குமார், அரசியலில் திடீர் முடிவுகளை எடுப்பதிலும் முக்கியமானவர். அதன்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு இது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.