இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை துவக்கம்.! பீகாரை ஆளப்போவது யார்.? முடிவு எப்போது தெரியும்?



bihar-election-vote-counting

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த கூட்டணியும் போட்டியிட்டது.

இதையடுத்து வாக்குகள் எண்ணும் பணி 10.11.2020 இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதற்காக 38 மாவட்டங்களில் 57 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Biharஇந்த தேர்தலில் இறுதி முடிவு தெரிய இரவு வரை ஆகலாம் என கூறப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குப்பதிவு மையங்களில் மிகுந்த கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளன. அந்த வகையில் வேட்பாளரும், அவரது முகவர்களாக 2 பேர் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மக்கள் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.