சூடுபிடிக்கும் வாக்கு எண்ணிக்கை.! பாஜகவை பின்னுக்கு தள்ளும் மெகா கூட்டணி.!



bihar election vote counting

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டது. 

இதையடுத்து வாக்குகள் எண்ணும் பணி 10.11.2020 இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

Bihar

அங்கு நடந்த தேர்தலில் நிதிஷ் குமார் இருக்கும்(பாஜக இணைந்துள்ள) தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி - காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணிக்கும்  இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இதுவரை வாக்குகள் எண்ணப்பட்டு ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. மெகா கூட்டணி 98  -இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி 79- இடங்களில் முன்னிலை வகிக்கிறது. லோக் ஜனசக்தி 5 இடங்களிலும், இதர கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.