தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
காதலர்தின ஸ்பெஷல்! ரோஜாக்களுக்கு பதிலாக இதை கொடுங்கள்! இளைஞர்களுக்கு அரசு கொடுத்த அசத்தலான ஐடியா!
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 இன்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய தினத்தில் ஆண், பெண் என அனைவரும் தங்களது காதலர் மற்றும் காதலிக்கு ரோஜா பூவை காதல் பரிசாக பரிமாறிக்கொள்வர். இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் பீகார் மாநில அரசு ரோஜாக்கள் கொடுப்பதற்கு பதிலாக மரக்கன்று நடும் யோசனையை கொண்டுவந்துள்ளது.
மேலும் இதற்கு பியார் கா பவுதா என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது மரங்கள் மீதான காதல் என்பதே அதற்கு அர்த்தம். இந்நிலையில் இது குறித்து பீகார் மாநில முதன்மை செயலாளர் தீபக் குமார் சிங் கூறுகையில், இளைஞர்களை மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிப்பதற்காக அரசு இதுபோன்ற யோசனையை கொண்டு வந்துள்ளது. காதலர் தினத்தன்று இதுபோன்ற செயல்களை நிச்சயம் இளைஞர்கள் செய்வார்கள். இதற்காக பாட்னா நகரில் இளைஞர்கள் அதிகமாக கூடும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு இலவசமாக மரக்கன்றுகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மரக்கன்றை நட்டதும் இளைஞர்கள் தங்களது வேலை முடிந்துவிட்டது என எண்ணாமல் அதனை பராமரிக்க வேண்டும். பொது இடங்களில் வைக்கும் மரக்கன்றுகளை அரசு பாதுகாக்கும். ஆனாலும் இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக மரக்கன்றுகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.