கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
சத்துணவு மைய ஊழியரை தாக்கி, தடுப்பூசி செலுத்த லஞ்சம் கேட்ட செவிலியர்.. குடும்பிப்படி சண்டை.!!
காசநோய் தடுப்பூசி செலுத்தியத்திற்கு இலஞ்சம் கேட்டு, சத்துணவு மைய ஊழியரை செவிலியர் தாக்கி, இருவரும் பிரசவ வார்டில் சண்டையிட்ட சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுய் மாவட்டம், லக்ஷ்மிபூரில் ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இந்த மையத்தில் காசநோய் தடுப்பூசி செலுத்த, நேற்று குழந்தையுடன் ரிந்து குமாரி என்ற பெண்மணி வந்துள்ளார். இவர் அங்கன்வாடி ஊழியர் ஆவார்.
அங்கன்வாடி ஊழியர் அழைத்து வந்த குழந்தைக்கு காசநோய் தடுப்பூசி செலுத்தியதும், அதற்காக ரூ.500 இலஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அங்கன் வாடி ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இலஞ்சம் கேட்ட செவிலியர் ரஞ்சனா குமாரிக்கும், ரிந்து குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த செவிலியர், அங்கன்வாடி ஊழியரை தாக்கவே, இருவரும் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாறி மாறி செருப்பால் அடித்து சண்டையிட்ட நிலையில், இந்த சம்பவம் அனைத்தும் பிரசவ வார்டு அருகே கலவரமாக நடந்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த நபரொருவர் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனில்லாமல், இருவரும் சண்டையிட்டு அவர்களாகவே விலகி சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகவே, சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.