ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் பயங்கரம்.. பெண்ணின் மீது ஆசிட் வீச்சு.. பரபரப்பு சம்பவம்.!
காதலிக்க மறுத்ததால், இளம்பெண் மீது திராவகம் ஊற்றிய கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் 25 வயதுடைய ஒரு இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது தந்தை காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில், பெண் காமாட்சி காவல்துறை எல்லைக்குட்பட்ட சுங்கதகட்டேயில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், இளம்பெண் வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு புறப்பட்டு சென்றபோது, கட்டடத்தின் முதல் மாடியில் பெண்ணுக்கு முன்பே தெரிந்த நபரான நாகேஷ் என்பவர் நின்று கொண்டிருந்துள்ளார். அவரை பார்த்ததும் முதல் தளத்தில் இருந்த இளம்பெண் கீழே இறங்கி வர, திடீரென நாகேஷ் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை பெண்ணின் முகத்தில் ஊற்றியுள்ளார்.
இதனால், அவருடைய முகம், கழுத்து, உடல் ஆகிய இடங்களில் வெந்து போக, அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வருவதைப்பார்த்து நாகேஷ் அங்கிருந்து தப்பியுள்ளார். அத்துடன் அருகிலிருந்தவர்கள் இளம்பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், மேற்கு மண்டல துணை காவல் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே நாகேஷுக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இளம்பெண்ணை நாகேஷ் காதலிப்பதாக கூறிய நிலையில், அவர் அதனை ஏற்க மறுத்ததால் 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். இதனால் பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் நாகேஷை கண்டித்ததால் கோபமுற்ற அவர், பெண வேலை பார்க்கும் நேரத்தில் சென்று நோட்டம் விட்டுள்ளார்.
மேலும், வெகு நாட்களாக காத்திருந்து அவர் மீது திராவகத்தை ஊற்றி தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து நாகேஷ் முன்னெச்சரிக்கையாக தனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கையுறை உள்ளவற்றை அணிந்து வந்ததாக இளம் பெண்ணின் தோழி கூறியுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய பின் காவல்துறையினர், நாகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பிடிப்பதற்காக தனிப்படை ஒன்றை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.