#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. நைசாக பேச்சுக்கொடுத்து பகீர் செயல்.!
ஆட்டோவில் செல்லலாம் என நைசாக அழைத்து, சிறுவனிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவிந்த சாலை பகுதியில் வசித்து வருபவர் ஸ்டீபன் (வயது 28). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 30ஆம் தேதியன்று இரவு காமராஜர் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, 12 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுவனிடம் நைசாக பேசி, 'ஆட்டோவில் இலவசமாக சவாரி செய்யலாம் வா' என்று அழைத்திருக்கிறார். சிறுவனும் இலவச சவாரி தானே என்று ஆசைப்பட்டு ஆட்டோவில் ஏற, ஒரு மறைவான இடத்திற்கு சென்றவுடன் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு காமுகன், சிறுவனுடன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் ஸ்டீபனிடமிருந்து தப்பிச்சென்று தனது பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் கூறிய நிலையில், அதிர்ந்து போன பெற்றோர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் விசாரணை செய்தபோது ஸ்டீபனின் உண்மை அம்பலமானது.
தொடர்ந்து, குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் காவல்நிலையத்தில் இந்த விஷயம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.