மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு செல்போன் மூலம் பெற்றோரின் 16 லட்சத்தை காலி செய்த சிறுவன்..! அப்படி என்ன டா பாத்த.? சிறுவனின் பதிலால் ஆடிப்போன குடும்பத்தினர்.!
சிறுவன் ஒருவன் பப்ஜி கேம் மூலம் பெற்றோர் சம்பாதித்து வைத்திருந்த 16 லட்சம் ரூபாயை காலிசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரின் 17 வயது பள்ளியில் படித்துவரும் நிலையில் ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறி தனது தாயின் செல்போனை வாங்கியுள்ளான். படிப்பதற்காகத்தானே என தாயும் தனது செல்போனை தனது மகனிடம் கொடுத்துள்ளார்.
செல்போனை கையில் வாங்கியதில் இருந்து சிறுவன் எப்போதும் போனும் கையுமாக இருந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த அவனது தந்தை இதுகுறித்து சிறுவனுடன் கேட்டபோது தான் ஆன்லைன் வகுப்பில் படித்துவருவதாக கூறியுள்ளான். சிறுவன் கூறியதை அவனது தந்தையும் நம்பியநிலையில் சில நாட்களில் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
எதார்த்தமாக தனது வங்கி கணக்குகளை சோதனை செய்தபோது தான் சேமித்துவைத்திருந்த 16 லட்சம் பணம் அனைத்தும் காலியாகியிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே தனது மகன் மீது சந்தேகம் வந்தநிலையில் அவனிடம் இதுகுறித்து விசாரித்ததில் மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய சிறுவன், அடுத்தடுத்த கட்டங்களை எட்டவும், புதிய அப்கிரேடுகளை செய்யவும் தனது பெற்றோரின் மூன்று வங்கி கணக்குகள் மூலம் சுமார் 16 லட்சத்தை செலவு செய்தது தெரியவந்தது. மேலும், பெற்றோருக்கு தெரியக்கூடாது என்பதால் வங்கியில் இருந்து வந்த மெசெஜ்களை உடனே டெலிட்டும் செய்துள்ளான்.
இதனை கேட்டு பதறிப்போன சிறுவனின் தந்தை உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, கேமில் இழந்த பணத்தை மீட்பது கடினம் என தெரிவித்துவிட்டனர். மகன் செய்த காரியத்தால் சோகத்தின் எல்லைக்கே சென்ற தந்தை, கோபத்தில் மகனை இருசக்கர வாகனங்கள் சீர் செய்யும் மெக்கானிக் கடையில் சேர்த்து விட்டுள்ளார். இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.