வெளுத்து வாங்கிய கனமழை! பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அசால்டாக அடித்துசெல்லப்பட்ட பாலம்! வைரலாகும் ஷாக் வீடியோ!
உத்தரகண்ட் மாநிலத்தில் இரவு முழுவதும் விடாது பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிறிய பாலம் ஒன்று அசால்டாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர், நைனிடால் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு முழுவதும் கடுமையான மழை பெய்து. இதனால் கோரி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தகைய கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி பல பகுதிகளில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
#WATCH Uttarakhand: A portion of a bridge collapses at Madkhot on Pithoragarh Munsyari road, following incessant rainfall. pic.twitter.com/x2KDrkGiHn
— ANI (@ANI) July 19, 2020
இந்நிலையில் பொங்கியெழுந்து ஓடிய வெள்ளப்பெருக்கால் மதன்கோட் என்ற இடத்தில் அமைந்துள்ள சிறிய பாலம் ஒன்று தாறுமாறாக அடித்துச்செல்லப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது தீயாய் பரவி வருகின்றது