மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுவனின் அந்தரங்க உறுப்பை அறுத்து கொலை செய்த கொடூரம்!. போலீசார் விசாரணை..!!
குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் தாமோர் என்பவர் குடும்பத்துடன், கடந்த 6 வருடங்களாக வசித்து வருகிறார். இவர் விவசாயக் கூலியாகப் வோலை செய்து வருகிறார்.
பங்கஜ் தாமோர் வேலை செய்யும் பண்ணைக்கு அருகில், அவருடைய 12 வயது மகனின் உடல் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது;- செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சிறுவன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளான். வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் வேலை செய்யும் பண்ணை அருகில் சிறுவனின் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். அங்கு சிறுவனின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்தது. அங்கு சிறுவனின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்த போது, கரும்பு வெட்டப் பயன்படுத்திய பில் கொக்கியை வைத்து சிறுவனின் தலையை தாக்கியியுள்ளனர். மேலும் சிறுவனின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.