#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
3 ஆண்டுகள் பாலியல் சித்திரவதை... நிர்வாண படங்கள் காட்டி மிரட்டல்.!! பி.டெக் மாணவிக்கு நேர்ந்த சோகம்.!!
கேரள மாநிலத்தில் பி டெக் மாணவிக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்த டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
டியூசன் ஆசிரியர்
கேரளாவைச் சேர்ந்த சரத் என்பவர் தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் தனியாக டியூசன் சென்டர் வைத்து மாணவ, மாணவிகளுக்கு கணித பாடத்திற்கு டியூசன் எடுத்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பி.டெக் மாணவி ஒருவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிளஸ் 1 படிக்கும் போது இவரது டியூஷனில் கணித பாடத்திற்காக சேர்த்து இருக்கிறார்.
நிர்வாண படங்கள் வைத்து மிரட்டி தொடர் பாலியல் சித்திரவதை
இந்நிலையில் டியூசனுக்கு வந்த மாணவியை அவருக்கு தெரியாமல் டியூசன் சென்டரில் வைத்து நிர்வாண படம் மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார் ஆசிரியர் சரத். இதனை வைத்து மிரட்டி கடந்த 3 வருடங்களாக அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். ஆசிரியரின் மிரட்டலுக்கு பயந்து தற்போது பி.டெக் படித்தாலும் அவரது டியூசன் சென்டருக்கு வருகை தந்திருக்கிறார் மாணவி.
இதையும் படிங்க: சட்டவிரோத கருக்கலைப்பு... துடி துடித்து இறந்த இளம் பெண் .!! மாமியார், கணவன் கைது.!!
கைது செய்யப்பட்ட ஆசிரியர்
இந்நிலையில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தனது தோழியிடம் அந்த மாணவி பகிர்ந்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது அறிவுரையின் பேரில் மாணவி காவல்துறையில் புகார் செய்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் சரத் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள காவல் துறை அவரிடம் மாணவியின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருக்கிறதா.? என செல்போனில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த ஆசிரியர் இதுபோன்று பிற மாணவிகளுக்கும் தொல்லை கொடுத்திருக்கிறாரா.? என்பது தொடர்பாகவும் காவல்துறை விசாரணை செய்கிறது.
இதையும் படிங்க: சொட்ட சொட்ட இரத்தம்... 10 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.!! இளைஞர் கைது.!!