மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி மீது சந்தேகம்.. குழந்தைகள் கண் முன்னே கொலை செய்த கணவன்.!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் இவரது மனைவி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இதனால் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால், மனைவி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது கணவனுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மனைவியை சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். ஆனால் இதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் மனைவி தனக்கு தெரியாமல் வேறு யாரிடமோ ரகசியமாக பழகுகிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுவாஞ்சல் விரைவு சாலையில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை குழந்தைகளின் கண் முன்னே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.