மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் காரில் பெண்ணை கொலை செய்து கால்வாயில் வீசிய ஓட்டுநர்! கொல்கத்தாவில் பரபரப்பு
கொல்கத்தாவில் ஓடும் காரிலேயே கொலை செய்து உடலை கால்வாயில் ஓட்டுநர் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அருகே முடியாலி பகுதியை சேர்ந்த 45 வயதான பெண்ணிடம் கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கடன் வாங்கியுள்ளார். அந்த பெண் அதே பகுதியில் ஊரக பணியில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவத்தன்று வேலை முடித்து அந்த பெண் தான் கடன் கொடுத்த கால் டாக்ஸி ட்ரைவருடன் காரில் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ட்ரைவர் அந்த பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் நீண்ட தூரம் பயணம் செய்து ஆள்நடமாட்டமில்லாத இடமாக பார்த்து கால்வாய் ஒன்றில் உடலை வீசியுள்ளார்.
மனைவியை காணாததால் கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடத்திய தேடுதல் வேட்டையில் போலீசார் உடலை கண்டறிந்தனர். மேலும் விசாரணையில் சிக்கிய ட்ரைவரையும் கைது செய்துள்ளனர்.