கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கனடாவில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக்கொலை; இன்று அடுத்த சம்பவம்.!
கனடாவில் வசித்து வரும் காலிஸ்தானிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பலரும் அடுத்தடுத்து மர்மமான வகையில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். காலிஸ்தானிய புலிகள் அமைப்பு படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட வழக்கில், கனடா அரசு இந்தியாவின் மீது பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தால் இந்தியா-கனடா இடையேயான உறவு வரலாற்றில் இல்லாத அளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், தங்களின் இருப்பிடம் தொடர்பான தகவலை தூதரகத்துடன் பகிர்ந்துகொள்ளுமாறும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மர்ம நபர்களால் மற்றொரு காலிஸ்தானிய பயங்கரவாதி சுக்தூள் சிங் என்ற சுகா டுனிக்கே (Gangster Sukhdool Singh alias Sukha Duneke) கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சுக்தூள், கடந்த 2017ல் போலியான ஆவணங்களுடன் இந்தியாவில் இருந்து கனடா தப்பி சென்றுள்ளார். அவரின் மீது பஞ்சாபில் வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இவரை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவித்திருந்த என்.ஐ.ஏ, கைது செய்யவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில், அவர் கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்தியாவில் அவர் A தரவரிசை பட்டியலில் உள்ள ரௌடி ஆவார்.
என்.ஐ.ஏ அதிகரிகளால் கனடாவில் இருக்கும் 43 ரௌடிகள் கூட்டத்தில், தற்போது சுட்டுக்கொல்லப்பட்ட சுக்தூளும் ஒருவர் அவர். இவர் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார். கடந்த காலங்களில் அவர் பாம்பியா குழுவுடன் இணைந்தும் குற்றச்செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.
கடந்த மார்ச் 2022ல் பஞ்சாப் மாநிலம் மாலின் கிராமத்தை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் சந்தீப் நகல் அம்பைன் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாகவும் ஸுஃத்தூள் இருந்துள்ளார். அடுத்தடுத்து காலிஸ்தானிய பயங்கரவாதிகள் கனடா மண்ணில் கொல்லப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.