மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோரின் கவனக்குறைவு.. அநியாயமாக பறிபோன குழந்தையின் உயிர்.!
கர்நாடக மாநிலம் உத்தரகண்ட் மாவட்டம் முண்டகோடா தாலுகாவில் உள்ள லக்கோலி கிராமத்தில் ரூபா தனது குடும்பத்தினரோடு வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ரூபாவின் மகள் மன்விதாவிற்கு காய்ச்சல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ரூபா மன்விதாவை தன்னோடு செங்கல் சூளைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து ரூபா செங்கல் சூளையில் வேலை பார்த்து கொண்டிருந்த நிலையில் அருகில் அவரது மகள் மன்விதா விளையாடி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது ரூபா வேளையில் கவனம் செலுத்திய போது குழந்தை மன்விதா அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரத்திற்கு பின் ரூபா விளையாடி கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள இடங்களில் மன்மிதாவை தேடியுள்ளார்.
பின்னர் சந்தேகத்தில் செங்கல் சூளையில் இருந்த தண்ணீர் தொட்டியை பார்த்தபோது அதில் மன்மிதா சடலமாக கிடந்ததை பார்த்து ரூபா கதறி அழுதுள்ளார். இதனையடுத்து முண்டகோடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.