மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார்..! ஆனால் இந்த ஒரே ஒரு கோரிக்கையை தவிர.! மத்திய அமைச்சர்.!
புதிய வேளாண் சட்டங்களைத் தவிர்த்து மற்ற விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவுள்ளது என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எப்போதும் பேசி வருகிறது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களைத் தவிர்த்து மற்றவை குறித்து பேச மத்திய அரசு தயாராகவுள்ளது. வேளாண் சட்டங்களைத் தவிர்த்து மற்ற பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முவைக்கலாம் என கூறியுள்ளார்.
மத்திய பிரதேச பா.ஜ.க. அரசில் நிலையற்ற தன்மை எதுவும் இல்லை. மத்திய பிரதேச அரசு கொரோனா சூழ்நிலையை சரியாக கையாளுகிறது. முதல்வர் சவுகான் மாற்றப்படுவார் என்று வெளியாகும் தகவல் உண்மை அல்ல. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. எனவே, முதல்வர் யார் என்பதை பா.ஜ.க.வே தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார்.