96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மத்திய அமைச்சரவையில் புதிய மாற்றம்.! தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி.! மோடிக்கு கூடுதல் பொறுப்பு.!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புதுமுகங்கள், இணையமைச்சர்களாக இருந்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், பொறியாளர்கள் மற்றும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு இந்தமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. தற்போதைய அமைச்சரவையில் காலி இடங்கள் அதிகம் உள்ளதால், குடியரசு தலைவர் மாளிகையில் புதிய மத்திய அமைச்சரவை பதவி ஏற்கும் விழா தொடங்கியுள்ளது.
இந்த புதிய அமைச்சரவையில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் புதுமுகமாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையை கூடுதலாக கவனிக்க உள்ளார். உள்துறை அமைச்சரான அமித்ஷா கூட்டுறவுத்துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அமைச்சரவையில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.