மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேஸ் சிலிண்டர் 10% விலை குறைப்பு..!! ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை..!!
எரிவாயு விலை கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சமையல் எரிவாயு விலையை குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலையை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. உச்சவரம்பு விலை நிர்ணயம் செய்யும் முறையில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும்.
இதன் காரணமாக, குழாய் மூலம் வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயுவின் விலை 10% வரை குறைய வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தை நிலவரப்படி இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயுவின் விலை இந்தியாவி 80% அளவுக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.