#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னை - கோழிக்கோடு இடையே டிச.25ம் தேதி வந்தே பாரத் இரயில் இயக்கம்: தென்னக இரயில்வே அறிவிப்பு.!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உலகமே தயாராகி வரும் நிலையில், இந்தியாவிலும் கிறிஸ்துவ மக்கள் கொண்டாட்டங்களை தொடங்கி இருக்கின்றனர்.
தலைநகர் சென்னையில் ஏராளமான கேரளா மாநிலத்தை சேர்ந்த கிருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சொந்த ஊர் செல்ல எதுவாக சிறப்பு பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பண்டிகை கால கூட்ட நெரிசலை கணக்கில் எடுத்துக்கொண்டு, தென்னக இரயில்வே டிசம்பர் 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர் இரயில் நிலையத்தில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்தே பாரத் இரயில் சேவை வழங்கியுள்ளது.
அதிகாலை 04:30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்படும் இரயில், மாலை 03:20 (இரயில்வே நேரப்படி 15:20) மணிக்கு கோழிக்கோடு சென்றடையும். இதற்கான டிக்கெட்டை பயணிகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.