மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படிப்பு பாதியில் தடைபடுமோ? என்ற பயத்தில் சிறுமி தற்கொலை.. பெற்றோர்கள் கண்ணீர்.!
சென்னையில் உள்ள பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் எம்.ஏ.சி நகரை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 42). இவர் கழிவுநீர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் பவானி (வயது 14). சிறுமி பவானி குமணன்சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
நேற்று பார்த்தீபன் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமி பவானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பவானியை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதி செய்துள்ளனர்.
பவானியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வசியராணி நடத்தப்பட்டது.
விசாரணையில், சிறுமி குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பு பாதியில் நின்றுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்து வந்துள்ளார். அவ்வப்போது குடும்பத்தினரிடமும் அதனை சொல்லி புலம்பி வந்த நிலையில், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.