#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடன் பணத்தில் சரக்கு, நண்பர்களுக்கு பார்ட்டி.. தம்பியை அடித்தே கொலை செய்த அண்ணன்.!
பணத்தை திருடி போதையில் ஊற்றிசுற்றிவந்த தம்பியை அண்ணன் கொலை செய்த நிலையில், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள வியாசர்பாடி மூர்த்தி நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரின் மகன்கள் கோகுல கண்ணன், வெள்ளை என்ற வினோத் குமார். கோகுலக்கண்ணன் தனது 2 வீலரை பழுது நீக்க வேண்டும் என்று கூறி, நண்பரிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி வீட்டிற்கு வந்துள்ளார்.
பணத்தை பார்த்த கோகுல கண்ணனின் தம்பி வினோத், அதனை திருடி நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தி ஊர் சுற்றி வந்துள்ளார். நேற்று இரவு நேரத்தில் மதுபோதையில் வினோத் வீட்டிற்கு வந்த நிலையில், கோகுல் மற்றும் ஈஸ்வரி பணம் எங்கே என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறவே, வினோத் குமாரை கோகுலக்கண்ணன் சரமாரியாக தாக்கி இருக்கிறார். வினோத் இறுதியில் வீட்டிலேயே மயங்கி விழ, போதையில் நடிக்கிறான் என்று நினைத்து தாயும், மகனும் உறங்க சென்றுள்ளனர். மறுநாள் காலையில் வினோத் இரத்த காயத்துடன் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கவே, உறவுக்கார பெண்ணை வரவழைத்து பரிசோதனை செய்கியில், அவர் இறந்தது உறுதியானது.
இதனால் கோகுலக்கண்ணன் மற்றும் ஈஸ்வரி செய்வதறியாது திகைக்க, அக்கம் பக்கத்தினர் எம்.கே.பி நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வினோத் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், வினோத்தின் செயல்பாடுகள் மற்றும் தாய் - மகனின் தாக்குதல் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.