மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊழல் வழக்கில் முதல்வரின் துணை செயலாளர் அமலாக்கத்துறையினாரால் கைது.. அரசியல் மட்டத்தில் பேரதிச்சி.!
நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல்வரின் துணை செயலாளரை கைது செய்த சம்பவம் அதிரவைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்டும் நிலக்கரியினை, அங்கிருந்து எடுத்துச்செல்லக்கூடிய நிறுவனத்திடம் சட்டவிரோத பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கடந்த அக்.11ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனையின் முடிவாக, கடந்த அக். 13ம் தேதி ஐ.ஏ.எஸ் அதிகாரி சமீர் விஷ்ணோய், இந்திராமணி குழுமத்தை சார்ந்த சுனில் அகர்வால், லட்சுமிகாந்த் திவாரி ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். ஊழல் தொடர்பான விவகாரத்தில் முதல்வர் பூபேஷின் துணை செயலர் சௌமிய சௌராசியாவின் வீட்டிலும் சோதனை நடந்தது.
இந்த சோதனைக்கு பின்னர், கடந்த 2 மாதங்களாக அவரிடம் வருமான வரித்துறையினர் பலமுறை விசாரணை நடத்தி வந்த நிலையில், இறுதியாக நேற்று அவரை நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர் விசாரணையும் நடந்து வருகிறது. இது அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.