மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய் - மகள் இரட்டைக்கொலை வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு வாழ்நாள் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
பி.ஜே.டி கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ இரட்டை கொலை செய்த விவகாரத்தில், அவரின் மீதான குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்கர் மாவட்டம், ஹமிர்பூர் வனப்பகுதியில் கடந்த 2016 ஆம் வருடம் கல்பனா என்ற பெண்ணும், அவரின் 13 வயது மகளும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடந்த 2019 ஆம் வருடம் முன்னாள் எம்.எல்.ஏ அனுப் சாயை அதிரடியாக கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில், எம்.எல்.ஏ அனுப் சாய் கல்பனாவுடன் கடந்த 2011 ஆம் வருடம் முதல் பழக்கத்தில் இருந்து வந்தது அம்பலமானது. மேலும், திருமணம் செய்துகொள்ளாமலேயே கல்பனாவுடன் சாய் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். கல்பனா ஒவ்வொரு முறை திருமணம் தொடர்பாக பேசும் போது, அனுப் அதனை தட்டிக்கழித்து வந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் வருடம் மே மாதம் திருமணம் தொடர்பாக பிரச்சனை ஏற்படவே, கல்பனா மற்றும் அவரின் மகளை தீர்த்துக்கட்ட எண்ணிய அனுப், அவரை ஊருக்கு அனுப்பி வைப்பது போல அழைத்து சென்று, தனது கார் ஓட்டுநர் ஹமிர்பூர் உதவியுடன் கொலையை அரங்கேற்றியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, எதுவும் தெரியாதது போல அனுப் சாய் இருந்து வந்த நிலையில், அவரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்துகையில் உண்மை அம்பலமானது. அவரின் அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சித்தாலும், அவருக்கு எதிரான சாட்சியங்கள் உறுதியான காரணத்தால் அவருக்கு தேர்தல் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான குற்றங்கள் உறுதியாகி, கடந்த 2019 ஆம் வருடம் அனுப் சாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் உடந்தையாக இருந்த கார் ஓட்டுனரும் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது, இரட்டைக்கொலை செய்த முன்னாள் எம்.எல்.ஏவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.