வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
ஆட்டை பலிகொடுத்து கண்களை சாப்பிட்டவர் மரணம்; குடும்பத்தினர் கண்முன் மூச்சுத்திணறி பலியான உயிர்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுராஜ்பூர் மாவட்டம், மதன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாகர் சாய் (வயது 50). இவர் தனது விருப்பம் நிறைவேறினால், ஆட்டை பலியிடுகிறேன் என வேண்டி இருக்கிறார்.
இவரின் வேண்டுதலும் நிறைவேறிய காரணத்தால், தனது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்தியுள்ளார். பலியிடப்பட்ட ஆட்டை கிராமத்தினர் சமைத்து கொடுத்துள்ளனர்.
இதனை குடும்பத்தினர் கோவிலில் வைத்து சாப்பிட்டுள்ளார். பாகர் ஆட்டின் கண்களை சாப்பிட்டதாக தெரியவருகிறது. கண்கள் புகாரின் தொண்டையில் சிக்கிக்கொள்ளவே, மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.
அவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் பலனில்லை. அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அவரின் குடும்ப உறுப்பினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.