வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
வேலைவாங்கி தருவதாக 17 வயது சிறுமியை சீரழித்த 3 பேர் கும்பல்; கார் பார்க்கிங்கில் நடந்த பயங்கரம்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைதேடி வந்துள்ளார். அவருக்கு சிக்கந்தர் ஜெயின் என்பவர் வேலை தருவதாக உறுதி அளித்துள்ளார்.
கடந்த செப். 19ம் தேதி அங்குள்ள ஜாய்ஸ்டம்ப் சவுக் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி கார் நிறுத்தத்திற்கு சிறுமியை வரச்சொன்ன நிலையில், அங்கு வேலை கொடுக்கிறேன் என தனது நண்பர்களை கயவன் அறிமுகம் செய்து வைப்பது போல நடித்து இருக்கிறான்.
பின்னர், சிக்கந்தர் ஜெயின், அவனின் நண்பர்கள் அவினாஷ் பெஹ்ரா, கௌரவ் ராஜ் ஆகியோர் சேர்ந்து சிறுமியை கார் நிறுத்தத்தின் கீழ்தளத்திற்கு ஆவணங்களை கொடுத்துவிட்டு வரலாம் என அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு 3 பேர் கும்பல் சிறுமியை பலவந்தப்படுத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவதாக மிரட்டி அங்கிருந்து சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்த சிறுமி, வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கண்ணீருடன் கூறி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலாத்காரம் தொடர்பாக புகார் அளித்தனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிக்கந்தர் ஜெயின், அவனின் 2 நண்பர்கள் என மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.