மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜேஎன்யூ-ல் மீண்டும் வெடித்த மோதல்... மாற்றுத்திறனாளி மாணவர் மீது கொலை வெறி தாக்குதல்.!
இந்தியாவில் இருக்கக்கூடிய தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று ஜேஎன்யூ என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். டெல்லியில் அமைந்திருக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
வலதுசாரி மற்றும் இடதுசாரி மாணவர்களுக்கு இடையே இந்த பல்கலைக்கழகத்தில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் பிஹெச்டி படித்து வந்த மாற்றுத்திறனாளி மாணவரை அகில பாரதிய வித்யாதி பரிஷத் ( ஏபிவிபி) என்ற வலதுசாரி மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் தாக்கி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் காவிரி விடுதியில் தங்கி பிஹெச்டி படித்து வந்த ஃபரூக் ஆலம் என்ற மாணவர் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நேற்று இரவு ஆலம் விடுதியில் இருந்தபோது அங்கு வந்த ஏபிவிபி மாணவர்கள் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
फारूक आलम,जो कि #JNU में शारीरिक रूप से विकलांग शोध विद्वान हैं उन पर #ABVP ने हमला किया।
— Wajidkhan (@realwajidkhan) September 6, 2023
ABVP वालों ने JNU में फारुक पर हमला किया है।
फारूक़ आलम कौन हैं-उनके तेवर से समझिए।
(JNU प्रेसिडेंशियल स्पीच 2017 का है।) pic.twitter.com/pfY31q86fm
அந்த மாணவரின் படிப்பு முடிவதற்கு இரண்டு மாத காலமே மீதம் இருந்த நிலையில் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த ஸ்டூடண்ட்ஸ் ஃபெடரேசன் ஆப் இந்தியா (எஸ்எஃப்ஐ) அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அகில பாரதிய வித்யாதி பரிசத் தொண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் புகார் அளித்துள்ளது