வகுப்பறையில் பள்ளியறை பாடம் படித்த மாணவ-மாணவிகள்: வைரலான வீடியோ..!



Close-up video of students hugging each other in the classroom

அசாம் மாநிலம், சில்சார் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ராமானுஜ் குப்தா. இந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பில் படிக்கும் சில மாணவ மாணவியர்கள் வகுப்பறையில் கட்டிப் பிடித்துக்கொண்டு மிக நெருக்கமாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனை அதே வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாகக் கூறப்படுகிறது.

 இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன் கிழமை  இந்த வீடியோ விவகாரம் பள்ளி நிர்வாகத்தின் பார்வைக்கு வந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவிகள் உள்ளிட்ட 7 பேர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவர்களது இந்த நடவடிக்கை குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு  சம்பந்தப்பட்ட ஏழு பேருக்கும் பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கல்வி நிறுவனத்தின் முதல்வர் பூர்ணதீப் சந்தா கூறுகையில், இந்த சம்பவம் மதிய உணவு இடைவேளையின் போது நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த நேரத்தில் ஆசியர்கள் யாரும் வகுப்பறையில் இருப்பது இல்லை. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் புதிதாக இங்கு சேர்ந்த மாணவர்கள். இவர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்று கூறினார்.