தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்தியாவில் மாபெரும் போர்; "வெற்றி நமக்கே" - ராகுல் காந்தி போர்முழக்கம்... பரபரப்பு பேச்சு.!
நாட்டில் வெறுப்பு, வன்முறையை பரப்பி இந்தியாவை பிளவுபடுத்த பாஜக செயல்பட்டு வருகிறது அதனை தோற்கடிப்போம் என ராகுல்காந்தி பேசினார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்துகின்றன. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, 15 க்கும் மேற்பட்ட மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் பாட்னா வருகை தந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநில கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "நாம் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி அடைந்தாள், இந்திய அளவிலும் அமோக வெற்றி அடையலாம்" என பேசினார். 2025ல் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவில் கருத்தியல் போர் என்பது நடைபெறுகிறது. பாஜகவின் சிந்தாந்தம் ஒருபுறம், நமது சித்தாந்தம் ஒருபுறம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ பீகாரில் இருக்கிறது. நாட்டில் வெறுப்பு, வன்முறையை பரப்பி இந்தியாவை பிளவுபடுத்த பாஜக செயல்பட்டு வருகிறது.
நாங்கள் அன்பை பரப்பி ஒன்றிணைக்க உழைத்து வருகிறோம். அதற்காக எதிர்க்கட்சிகள் இங்கு வந்துள்ளன. நாங்கள் ஒன்றிணைந்து பாஜகவை தோல்வியுற செய்வோம். தெலுங்கானா, மத்திய பிரதேசம் & ராஜஸ்தானில் வெற்றி பெறுவோம். நாம் ஏழை மக்களுக்காக துணை நிற்கிறோம். பாஜக செல்வந்தர்களுக்காக நிற்கிறது" என பேசினார்.