இந்தியர்கள் சாப்பிட்ட இட்லி, சாம்பாரால் குறைந்துபோன கொரோனா பலி எண்ணிக்கை - ஐ.சி.எம்.ஆர் அதிரடி அறிவிப்பு.!
கடந்த 2021ம் ஆண்டு முதல் உலக மக்களை கொரோனா வைரஸ் பெருமளவு அச்சுறுத்திவிட்டது. இந்த வைரஸால் பல கோடி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவிலும் 5 இலட்சத்திற்கும் அதிகமான மரணங்கள் ஏற்பட்டுவிட்டன.
இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (ICMR) தொடர்ந்து கொரோனா மற்றும் அதன் பரிணாமம் தொடர்பாக ஆய்வு நடத்தி, மாநில அரசுகளை எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில், தென்னிந்திய மக்கள் சாப்பிடும் இட்லி மற்றும் அதற்கு தொட்டுக்கொள்ள பயன்படும் சாம்பார் உட்பட குழம்பு வகைகளால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு குழம்பிலும் மஞ்சள் உபயோகம் செய்துள்ளனர்.
ஐ.சி.எம்.ஆர் ஆய்வுப்படி இந்திய மக்கள் நாளொன்றுக்கு 4 மடங்கு காய்கறி, 1.2 கிராம் தேநீர், 2.5 கிராம் அளவு மஞ்சள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டுள்ளனர் என்ற முடிவுகள் தெரியவந்துள்ளது.
தென்னிந்திய மக்கள் சாப்பிடும் இட்லி மற்றும் சாம்பார் காரணமாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து உயிரிழப்பு குறைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.