மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர்... மகிழ்ச்சியான செய்தி.! திடீரென சரிந்த கொரோனா பாதிப்பு.!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் நேற்றைய பாதிப்பை விட இன்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 16 ஆயிரத்து 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் நேற்று 16 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா மரணங்கள் 20க்கும் மேல் என்ற அளவிலேயே இருந்த நிலையில், தற்போது மிக லேசாக குறைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.