மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,617 பேருக்கு புதிதாக கொரோனா.. மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 38,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,12,908 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 474 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,30,993 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 44,739 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில் இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83,35,110 ஆக உயர்ந்துள்ளது.