பெண் மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள்! அதிர்ச்சி காரணம்!



corona patient spitting on women doctor

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு திரிபுரா மாநிலத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  திரிபுரா மேற்கு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் பெண் மருத்துவர் மீது நோயாளிகள் எச்சில் துப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்தில் சுகாதார கண்காணிப்பு அலுவலரும், பெண் மருத்துவருமான சங்கிதா சக்ரபோர்த்தி, கடந்த வாரம் பிரசவம் முடிந்த பெண் நோயாளிகள் சிலரை அங்கு அனுமதிக்க அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது நோயாளிகள் சிலர் சங்கிதாவை வழிமறித்து நிறுத்தி, அங்கே படுக்கைகள் காலியாக இல்லை என்று தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

corona

மீறி அவர்களை அழைத்துவந்தால் அவர்களுக்கு கொரோனாவைப் பரப்புவோம் என்று அச்சுறுத்தியுள்ளனர். அப்போது கொரோனா நோயாளிகளில் ஒருவர் மையத்தின் கூரை மீதேறி நின்று கொண்டு, தண்ணீரை வாயில் ஊற்றிக் கொப்பளித்து பெண் மருத்துவர் சங்கிதாவின் மீது துப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கிதா உடனடியாக மையத்தின் உள்ளே ஓடி தப்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் 4 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதனையடுத்து மாஜிஸ்திரேட் நீதிபதி குற்றச்சாட்டு கூறப்பட்டவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் பிணை தொகையில் ஜாமீன் வழங்கினார்.  இதற்கு நிகரான மற்றொரு தொகையை வரும் 10ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் 4 பேரும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.