53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
டெல்லியிலிருந்து வந்த நல்ல செய்தி.. முதன்முதலாக கொரோனா பாதித்தவர் குணம்!
டெல்லியில் முதன்முதலாக கொரோனா பாதிக்கபட்டதாக கண்டறியப்பட்ட 45 வயது தொழிலதிபர் தற்போது குணமாகி வீடு திரும்பியிருப்பதாக மருத்துவமனை தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஐ தாண்டியுள்ளது. இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர்; 10 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது டெல்லியில் ஒருவரும் குணமடைந்துள்ளார்.
45 வயதான தொழிலதிபர் முதன்முதலாக கொரோனா அறிகுறியுடன் மார்ச் 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
அதற்கு முன்னர் அவர் தனது மகனின் பிறந்தநாளினை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் விமரிசையாக கொண்டாடியுள்ளார். அந்த விழாவில் கலந்துகொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் 14 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அந்த தொழிலதிபர் குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். வீட்டிலிருந்தபடியே அவரது உடல்நலனை தொடர்ந்து கண்கானிக்குமாறு குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.