400 ரூபாயில் ஒரு மணி நேரத்தில் ரிசல்ட்.. உதயமானது புதிய கொரோனா பரிசோதனை கருவி!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பலரும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மக்கள் மத்தியில் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று ஏற்படுவதைக் காட்டிலும் அதிலிருந்து குணமாக அதிகம் செலவாகுமோ என்ற அச்சம் மக்களை பெரிதும் வாட்டி வதைக்கிறது. கொரோனா பரிசோதனைக்கு சில இடங்களில் 2000 முதல் 5000 வரை வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் வெறும் 400 ரூபாய் செலவில் கொரோனா தொற்றினை துல்லியமாக கண்டறியும் கருவியினை காரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். மேலும் இதனை கையாள குறைவான பயிற்சியே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திலேயே சோதனை முடிவுகளை அறிவிக்க கூடிய இந்த புதிய கருவியினை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐஐடி செய்திகுறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.