ஏழு மாங்காய்களை பாதுகாக்க, 4 பாதுகாவலர்கள், 6 நாய்களை நியமித்த தம்பதியினர்! அதில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா!!



couples-arrange-4-watchman-and-6-dogs-for-saving-7-mang-RL6AHK

மத்திய பிரதேச மாநிலத்தில் 2 மாமரத்தில் உள்ள 7 காய்களை பாதுகாக்க 4 பாதுகாவலர்களை 6 நாய்களை உரிமையாளர்கள் பாதுகாப்புக்கு வைத்துள்ள  சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர்கள் சங்கல்ப் பரிகார் மற்றும் ராணி தம்பதியினர். அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இரு மாங்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த மரம் வளர்ந்த பிறகு அதிலிருந்த காய்கள் மிகவும் வித்தியாசமாக சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. இது அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் வளர வளர கலர் முழுவதும் வித்தியாசமாக மாறிய நிலையில் அவர்கள் இதுகுறித்து ஆன்லைனிலும், விவசாய ஆய்வாளர்களிடமும் கேட்டுள்ளனர்.

Mangoஅப்பொழுது இது உலகிலேயே மிக அரிய வகையான மியாசாகி மாங்காய் என தெரியவந்துள்ளது. இந்த மாம்பழம் மிக அரிதாக கிடைக்கக் கூடியது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மரக்கன்றுகளை அவர்கள் சென்னைக்கு ரயிலில் வரும்போது அறிமுகமான நபர் ஒருவர் கொடுத்துள்ளார். அவர்களும் இது சாதாரணமாக மாகன்றுகள் என எண்ணியே நட்டு வைத்துள்ளனர். 

தற்போது இரண்டு மரங்களில் 7 காய்கள் மட்டுமே உள்ளன. இது கிலோவிற்கு ரூ2.70 லட்சம் என விற்பனையாகிறது. மேலும் ஒரு மாங்காய் மட்டும் ரூ21 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இந்நிலையில் அந்த மாங்காய்கள் திருடு போகும் அபாயம் இருப்பதால் உரிமையாளர்கள் அதற்கு 4 பாதுகாவலர்களையும் 6 நாய்களையும் பாதுகாப்பிற்காக நியமித்துள்ளனர்.