மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனுக்கு மனைவி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
உடல்நலம் சரியில்லாத கணவருக்கு அவரது மனைவி மாதம் ரூ.10,000 ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சமீர் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வருமானம் ஈட்ட முடியவில்லை எனவும் அதனால் தனது மனைவி தனக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியான நிலையில், சமீருக்கு அவரது மனைவி மாதம் பத்தாயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து சமீரின் மனைவி மேல் முறையீடு செய்துள்ளார்.
அந்த மேல் முறையீடு மனுவில், தன்னுடைய வேலையை தான் ராஜினாமா செய்து விட்டதாகவும், அதனால் தன்னால் ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
அதன்படி, அந்த பெண்ணின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி மாதம் 10,000 ரூபாய் கணவனுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது. வேலையை ராஜினாமா செய்த போதிலும், அவருக்கு வருமானம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், வருமானம் இல்லாத கணவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.