மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா கோரதாண்டவம்! இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் செய்த நெகிழ்ச்சி காரியத்தை பார்த்தீர்களா!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று மாலை முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை 144 தடை சட்டம் விதிக்கபட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் வெளியே சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரைக் குடிக்கும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, அனைவரும் வீட்டிற்குள்ளே இருக்க அறிவுறுத்தும்படி, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன் தனது டுவிட்டரின் பெயரை வீட்டிற்குள்ளே இருப்போம் இந்தியா என மாற்றியுள்ளார்.