53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மதம் மாறிய காதலால் வீட்டை விட்டு ஓடிய மகள்..! கழுத்தை அறுத்து கொன்ற பெற்றோரால் பரபரப்பு..!
மகள் வீட்டை விட்டு காதலனுடன் சென்றதால் ஆத்திரமடைந்த பெற்றோர் மகள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நார்நுர் மண்டலம், நாகலூ குண்டா பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி சாவித்திரிபாய். தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
தேவதாசின் இளைய மகள் ராஜேஸ்வரி (20). அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். ராஜேஸ்வரியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. வேறு மதத்தைச் சேர்ந்த வாலிபரை காதலிப்பதற்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி தனது காதலனுடன் திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். இதனால் அவமானம் அடைந்த ராஜேஸ்வரியின் பெற்றோர் நார்நுர் காவல் நிலையத்திஉல் புகார் செய்தனார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காவல்துறையினர் காணாமல் போன ராஜேஸ்வரி மற்றும் அவரது காதலனை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து ராஜேஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் ராஜேஸ்வரியை அழைத்து சென்ற அவரது காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜேஸ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு அழைத்து வந்த ராஜேஷ்வரயை நேற்று அதிகாலை அவரது பெற்றோர் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தனது மகள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜேஸ்வரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நார்நுர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் ராஜேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேவதாஸ் சாவித்திரி பாய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.