மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
60 வயது கள்ளக்காதலி கொலை: 31 வயது இளைஞரின் அதிர்ச்சி செயல்.. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் பகுதியை சேர்ந்தவர் தேவேந்தர்(வயது 31). இவர் கடந்த 2019ம் ஆண்டு டெல்லிக்கு வேலைதேடி வந்துள்ளார். சரிவர வேலை கிடைக்காத காரணத்தால், தனது தந்தையிடம் தான் ஜெர்மனிக்கு படிக்கச் செல்வதாக கூறியுள்ளார். அவரும் தனது பெயரை இருந்த நிலத்தை விற்பனை செய்து பணம் அனுப்பியுள்ளார். தற்போது வரை தந்தையிடம் இருந்து வெளிநாட்டில் படிப்பதாகவும் பணம் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், 2020ம் ஆண்டில் இவர் ஆஷா தேவி (வயது 60) என்ற பெண்ணின் வீட்டில் வாடகைக்கு குடியேறி இருக்கிறார். அங்கு ஆஷா தேவி - தேவேந்தர் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கள்ளக்காதல் வாழ்க்கையை அனுபவித்து இருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆஷா தேவியின் வாடகை வீட்டில், இளம்பெண் ஒருவர் குடியேறி இருக்கிறார். அவரிடம் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகம் செய்த தேவேந்தர், நட்பு ரீதியாக பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பின் பெண்ணை தனது காதல் வலையில் வீழ்த்தியவர், பெண்ணின் சகோதரருக்கு சிபிஐ-யில் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.
இதனால் பெண்மணி தேவேந்தரை திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்க, கடந்த டிசம்பர் 4ம் தேதி இருவருக்கும் இடையே நிச்சயமும் முடிந்துள்ளது. கடந்த 10ம் தேதி இவ்விவகாரம் ஆஷா தேவிக்கு தெரியவரவே, அவர் தேவேந்தரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரச்சொல்லியுள்ளர். அங்கு தேவேந்தரின் திருமணத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.
இருவரும் இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் நடக்கவே, ஆத்திரமடைந்த தேவேந்தர் ஆஷா தேவியை செங்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார். பின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
கிட்டத்தட்ட 5 நாட்கள் கழித்து அழுகிய துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் டிசம்பர் 15 அன்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் வீட்டிற்குள் சென்று சோதனையிட்டபோது ஆஷா தேவியின் அழுகிய சடலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில் உண்மை அம்பலமாகவே, காவல் துறையினர் தேவேந்தரை கைது செய்தனர். விசாரணையில் மேற்கூறிய அதிர்ச்சி தகவல் அம்பலமானது.