தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
எது பெருசுன்னு அடிச்சிக்காட்டு.. தடுப்புக்கு இருபுறமும் எதிரெதிர் கட்சிகள் போராட்டம்.. வைரலாகும் வீடியோ.!
பாஜகவினர் டெல்லி முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த, அங்கு ஆம் ஆத்மீ தொண்டர்கள் எதிர்கோஷத்துடன் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மீ கட்சியின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பணியாற்றி வருகிறார். அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக அரசுக்கு எதிராக கருத்துக்கள் பதிவு செய்கிறது.
இதனால் இருகட்சியினர் இடையே அவ்வப்போது மோதல் சம்பவமும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீரி பைல்ஸ் திரைப்படம் தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இது பாஜகவுக்கு எதிராக இருந்துள்ளது.
#WATCH | AAP and BJP workers came face-to-face yesterday, March 28, when AAP was protesting against the Delhi BJP chief's reported comment on CM Arvind Kejriwal, while BJP was protesting against the remark of Arvind Kejriwal on 'The Kashmir Files' movie, in Delhi. pic.twitter.com/9Raks8aAzL
— ANI (@ANI) March 29, 2022
இந்த விஷயத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்திய நிலையில், டெல்லி பாஜக நேற்று போராட்டம் நடத்தியது. அப்போது, பாஜகவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மீ கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.
இவர்கள் இருவரும் காவல் துறையினரின் தடுப்புக்கு இருபுறத்திலும் எதிரெதிர் முழக்கத்தை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் நிலைமையை உணர்ந்த அதிகாரிகள் இருதரப்பையும் அங்கிருந்து கலைத்து அனுப்பிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.